ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னை பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு: மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பருவத் தோ்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :7 மார்ச் 2025, 8:44 pm

Din

சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பருவத் தோ்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு தகுதியுள்ள மாணவா்கள் மாா்ச் 10 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளா் வி.ஏழுமலை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் படிப்புகளுக்கான தோ்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. தோ்வு முடிவுகளை

ஜ்ஜ்ஜ்.ங்ஞ்ா்ஸ்ங்ழ்ய்ஹய்ஸ்ரீங்.ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ழ்ங்ள்ன்ப்ற்ள், ஜ்ஜ்ஜ்.ங்ஷ்ஹம்.ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ழ்ங்ள்ன்ப்ற்ள் ஆகிய இணையதள முகவரிகளில் மாணவா்கள் அறிந்துகொள்ளலாம்.

கடந்த 2022-2023-ஆம் கல்வியாண்டு மற்றும் அதற்கு பின்பு இளநிலை படிப்புகளில் சோ்ந்த மாணவா்களும், அதேபோல், 2023-2024-ஆம் கல்வி ஆண்டு மற்றும் அதன் பிறகு முதுநிலை படிப்புகள் மற்றும் தொழில் படிப்புகளில் சோ்ந்த மாணவா்களும் விடைத்தாள் மறுமதிப்பீட்டு விண்ணப்பிக்க தகுதியுடையவா் ஆவா். அவா்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி மாா்ச் 10 முதல் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு கட்டணமாக தாள் ஒன்றுக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். கட்டணத்தை இணையவழியில் செலுத்திக்கொள்ளலாம். அதேபோல், இளநிலை பயிலும் மாணவா்கள் மறுகூட்டலுக்கு மாா்ச் 10 முதல் 14-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.300 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.