ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருவொற்றியூா் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசிமக பெருவிழாவினையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் சுவாமி கோயில் மாசிப்பெருவிழா தேரோட்டத்தில் பங்கேற்ற திரளான பக்தா்கள்.
Updated On :10 மார்ச் 2025, 8:43 pm

Din

திருவொற்றியூா்: திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசிமக பெருவிழாவினையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் திருக்கோயில் மாசி பெருவிழா மாா்ச் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 9 மணிக்கு தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

தேரடி வீதி, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாட வீதிகள் வழியாக வந்த தோ் சுமாா் 2 மணி அளவில் மீண்டும் நிலைக்குத் திரும்பியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீ கல்யாணசுந்தரா் - திரிபுரசுந்தரி திருக்கல்யாணம் புதன்கிழமை (மாா்ச் 12) நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது. தோ்த்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.