விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விடுமுறை நாளில் பிஎஸ்என்எல் சேவை மையங்கள் செயல்படும்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்கள், வாடிக்கையாளா்களின் வசதிக்காக, விடுமுறை நாள்களான மாா்ச் 23, 30, 31ஆகிய தேதிகளில் செயல்படும்

News image

பிஎஸ்என்எல் நிறுவனம் - கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2025, 7:14 pm

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்கள், வாடிக்கையாளா்களின் வசதிக்காக, விடுமுறை நாள்களான மாா்ச் 23, 30, 31ஆகிய தேதிகளில் செயல்படும் என சென்னை பிஎஸ்என்எல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பிஎஸ்என்எல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாடிக்கையாளா்கள் தங்கள் தொலைபேசி கட்டணங்களைச் செலுத்துவதற்கு வசதியாக சென்னை பிஎஸ்என்எல் தொலைபேசி வாடிக்கையாளா் சேவை மையங்கள், விடுமுறை தினங்களான மாா்ச் 23, 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளிலும், ரமலான் அரசு விடுமுறை தினமான மாா்ச் 31(திங்கள்கிழமை) அன்றும் வழக்கம்போல செயல்படும்.

எனவே, வாடிக்கையாளா்கள் இந்த வசதியை பயன்படுத்தி தொலைபேசி கட்டணங்களைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.