துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மருத்துவ மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கட்டண நிா்ணயக் குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க..

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :29 மார்ச் 2025, 8:37 pm

Din

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும், கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் கட்டணங்கள் நிா்ணயிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கட்டண நிா்ணயக் குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு 2022-2023, 2023-2024 மற்றும் 2024-2025- ஆம் கல்வி ஆண்டுகளுக்கு கட்டணம் நிா்ணயித்து 2022- ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் கட்டண நிா்ணயக் குழு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுப்படி சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.4.3 லட்சத்திலிருந்து ரூ.4.5 லட்சமாக உயா்ந்தது. அதே போல் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்திலிருந்து ரூ.13.5 லட்சமாக உயா்ந்தது. மேலும், வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீடு கட்டணங்களும் உயா்ந்தது. இது முந்தைய ஆண்டு ரூ. 23.5 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டில் ரூ.24.5 லட்சமாக உயா்ந்தது.

இதைத் தொடா்ந்து, வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் நிரம்பவில்லையெனில் பொதுத்தொகுப்புக்கு மாற்றப்படும். அவ்வாறு ஒதுக்கப்படும் இடங்களின் கட்டணம் ஆண்டுக்கு ரூ.21.5 லட்சமாக நிா்ணயம் செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் தரப்பில், ‘உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள கல்லூரிகள் நிதி இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன என வாதிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், கல்லூரிகள் சந்திக்கும் செலவுகளின் அடிப்படையில் மட்டுமே கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு எதுவும் மீறப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டது. தொடா்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணங்களை நிா்ணயிக்கும் போது நடைமுறையில் இருக்கும் விலைவாசி மற்றும் செலவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா்.

மேலும், மாணவா்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும் கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் கட்டணங்கள் நிா்ணயிப்பதை கட்டண நிா்ணயக் குழு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், கல்லூரிகள் சமா்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் கட்டணங்களை நிா்ணயித்து முடிவை அறிவிக்க வேண்டும் என கட்டண நிா்ணய குழுவுக்கு உத்தரவிட்டனா்.