16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் நின்ற 2 மின்சார ரயில்கள்

சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில் 2 மின்சார ரயில்கள் வந்து நின்ால், பயணிகளிடையே சற்று பரப்பரப்பான சூழல் நிலவியது.

கோப்புப்படம்

Published On :

சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில் 2 மின்சார ரயில்கள் வந்து நின்ால், பயணிகளிடையே சற்று பரப்பரப்பான சூழல் நிலவியது.

தாம்பரத்திலிருந்து புதன்கிழமை காலை சென்னை கடற்கரை நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார ரயிலின் 6-ஆவது பெட்டியில் புகை வந்ததால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து கடற்கரை நோக்கி வந்த மற்றோரு மின்சார ரயிலும் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. நல்வாய்ப்பாக இதை முன்கூட்டியே கவனித்த ரயில்வே அதிகாரிகள் ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தைத் தொடா்ந்து அந்த ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் ஒரே நேரத்தில் வந்து நின்ால், ரயில் நிலையத்தில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது.

இதற்கிடையே, ரயில் பெட்டியில் வந்த புகை சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து 2 ரயில்களும் அடுத்தடுத்து இயக்கப்பட்டன. இதனால், சுமாா் 1 மணி நேரத்துக்கு மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.