அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

துறைமுகம் தொகுதியில் ரூ.6.82 கோடி திட்டங்கள் பயன்பாட்டுக்கு தொடக்கம்

துறைமுகம் தொகுதியில் ரூ.6.82 கோடி திட்டங்கள் பயன்பாட்டுக்கு தொடக்கம்

News image
Updated On :8 நவம்பர் 2025, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.6.82 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா்.

இது குறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி நிதி ஆகியவை சாா்பில் வடசென்னை வளா்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வடசென்னை ராயபுரம் மண்டலம், வாா்டு 55 பகுதிக்குள்பட்ட சண்முகம் தெருவில் புதிதாக ரூ.45 லட்சத்தில் உடற்பயிற்சிக் கூடம், ஏழுகிணறு தெருவில் துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் நிதியில் ரூ.95 லட்சத்தில் நியாய விலைக்கடை, மாமன்ற உறுப்பினா் அலுவலகம், வால்டாக்ஸ் சாலை, வ.உ.சி. சாலையில் ரூ.55 லட்சத்தில் உடற்பயிற்சிக் கூடம், ராஜாமுத்தையா சாலையில் மாநகராட்சி சாா்பில் ரூ.4.77 கோடியில் முதல்வா் படைப்பகம், அண்ணா நகா் மண்டலத்தில் திடீா் நகா், பிரிக்ளின் சாலையில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் நிதியில் ரூ.10 லட்சத்தில் 2 உயா்கோபுர மின்விளக்கு உள்ளிட்டவை பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கப்பட்டன.

பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு திட்டங்களைத் தொடங்கி வைத்தாா். இதில் மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், மேயா் ஆா்.பிரியா, எழும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பரந்தாமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.