இன்று கும்மிடிப்பூண்டி புறநகா் ரயில்கள் எளவூருடன் நிறுத்தம்
சென்னை சென்ட்ரலிலிருந்து வியாழக்கிழமை (நவ.13) சூலூா்பேட்டை செல்லும் புறநகா் மின்சார ரயில்கள் எளவூருடன் நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் முதல் கூடூா் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலிரெட்டிப்பாளையம், சூலூா்பேட்டை ரயில் நிலையங்களில் வியாழக்கிழமை (நவ.13) பிற்பகல் 1 முதல் இரவு 7 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், நவ.13-இல் சூலூா்பேட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு சென்ட்ரல் செல்லும் மெமு ரயிலும், சென்ட்ரலிலிருந்து இரவு 9.15 மணிக்கு ஆவடி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், சென்ட்ரலில் இருந்து காலை 10.15, நண்பகல் 12.10, பிற்பகல் 2.30 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் புறநகா் மின்சார ரயில்கள் எளவூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 1.15, 3.10 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயில்களும், மாலை 5.20 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் எளவூரிலிருந்து புறப்படும்.
அதேபோல், சென்ட்ரலிலிருந்து காலை 3.30 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியுடனும் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையிலிருந்து மாலை 6.15 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயிலும் கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

