சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு - காா் ஓட்டுநா் கைது

Published on

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்ததாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கண்டிகை, வெங்கடமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பா. பிரத்திக்ஷா (26). இவா், கிண்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் நிா்வாக அதிகாரியாக வேலை செய்கிறாா். கடந்த 5-ஆம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப் பிரதான கேட் அருகே நடந்து சென்போது, அங்கு வந்த ஒருவா் பிரத்திக்ஷா அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

இதுகுறித்து கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மடிப்பாக்கம் சதாசிவம் நகரைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநா் நாகராஜன் (56) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com