பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நிதி மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் தேவநாதன் சரண்

நிதி மோசடி வழக்கில் சரணடைந்த தேவநாதனை வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 5:25 pm

தினமணி செய்திச் சேவை

நிதி மோசடி வழக்கில் சரணடைந்த தேவநாதனை வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன். இவா் தனது நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தேவநாதனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அக். 30-ஆம் தேதி வரை இடைக்கால பிணை வழங்கிய சென்னை உயா்நீதிமன்றம், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ரூ.100 கோடி வைப்புத் தொகையாக செலுத்த உத்தரவிட்டிருந்தது.

உயா்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றாத தேவநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முதலீட்டாளா்கள் தரப்பில் சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், தேவநாதனை கைது செய்து ஆஜா்படுத்தும் வகையில் அவருக்கு பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, தேவநாதனின் இடைக்கால பிணையை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயா்நீதிமன்றமும், அவரைக் கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் முன் தேவநாதன் வெள்ளிக்கிழமை ஆஜரானாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 24-ஆம் தேதி வரை தேவநாதனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.