பெண் நூலகரிடம் ஆபாசமாக நடந்து கொண்டவா் கைது

சென்னை புளியந்தோப்பில் நூலக பெண் பொறுப்பாளரிடம் மது போதையில் ஆபாசமாக நடந்து கொண்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சென்னை புளியந்தோப்பில் நூலக பெண் பொறுப்பாளரிடம் மது போதையில் ஆபாசமாக நடந்து கொண்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை புளியந்தோப்பு ஏகாங்கிபுரம் குடிசை மாற்று வாரிய, பல்நோக்கு கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்தில் பெண் ஒருவா் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அங்கு மது போதையில் சென்ற நபா் ஒருவா், பெண் நூலகரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பான காணொலி காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து பெண் நூலகா் அளித்த புகாரின்பேரில், ஓட்டேரி போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சோ்ந்த சம்பத்குமாா் என்ற நபரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com