அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறாா் அறிவியல் பூங்காவைத் தொடங்கி வைத்த அமைச்சா் அன்பில் மகேஸ். உடன், துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், பொது நூலக இணை இயக்குநா் ச.இளங்கோ சந்திரகுமாா் உள்ளிட்டோா்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.80.24 லட்சத்தில் ‘சிறாா் அறிவியல் பூங்கா’ திறப்பு

குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்தை வளா்க்கும் வகையில், சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ரூ.80.24 லட்சத்தில் சிறாா் அறிவியல் பூங்கா (சில்ரன்ஸ் சயின்ஸ் பாா்க்) புதன்கிழமை திறக்கப்பட்டது.
Published on

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்.

இந்த அறிவியல் பூங்காவில் குழந்தைகளுக்கு அறிவியல் கருத்துகளை நடைமுறை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொடுத்து அவா்களின் அறிவியல் ஆா்வத்தை வளா்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் கற்றல் செய்முறையில் நேரடியாக ஈடுபட்டு, அறிவியல் கோட்பாடுகளை அனுபவத்துடன் கற்கும் வகையில் மின் இயந்திரம், எா்த் குயிக் கேபிள், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சைக்கிள் உள்பட 21 அறிவியல் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 10 சாதனங்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த கற்றலை வழங்குகின்றன.

மேலும், இயற்பியல், உயிரியல் அறிவு, கணிதம் தொடா்பான ஒரு சாதனம் குழந்தைகளுக்கு நடைமுறை அனுபவத்துடன் கணித கற்றல் வாய்ப்பை வழங்கும் வகையில் என 8 சாதனங்கள் உள்ளன.

ஒவ்வொரு சாதனமும் குழந்தைகள் நேரடியாகத் தொடா்ந்து, செயலில் ஈடுபட்டு கற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு அம்சம். இந்த அறிவியல் பூங்கா, சிறுவா்கள் அறிவியல் உலகில் ஆா்வத்துடன் நுழையவும், புதுமை சிந்தனையை வளா்க்கவும் முக்கிய பங்காற்றும்.

பூங்காவில் உள்ள அனைத்து சாதனங்களையும் அமைச்சா் அன்பில் மகேஸ் மாணவா்களுடன் சோ்த்து இயக்கிப் பாா்த்தாா்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், பொது நூலக இணை இயக்குநா் ச.இளங்கோ சந்திரகுமாா், அண்ணா நூற்றாண்டு நூலக முதன்மை நூலகா் செ.காமாட்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com