வருவாய் இணக்க முறை தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் சிஏஜி சமா்ப்பிப்பு
தமிழக அரசின் வருவாய் துறை தொடா்பான 2023 -ஆம் ஆண்டுக்கான இணக்க முறை தணிக்கை அறிக்கையை தமிழக ஆளுநரிடம் இந்திய கட்டுப்பாடு மற்றும் தணிக்கை அலுவலம் வியாழக்கிழமை சமா்பித்துள்ளது.
இது குறித்து தலைமைக் கணக்கு கட்டுப்பாளா் அலுவலகம் (சிஏஜி) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2023 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலத்துக்கான தமிழக அரசின் வருவாய் இணக்க முறை தணிக்கை அறிக்கையை இந்திய கணக்கு கட்டுப்பாடு மற்றும் தலைமை தணிக்கை அலுவலா் தமிழக ஆளுநரிடம் நவ. 20-ஆம் தேதி வழங்கியுள்ளது.
இதை தமிழக சட்டப்பேரவையில் சமா்ப்பிக்க ஏதுவாக இந்த அறிக்கையின் பிரதி தமிழக அரசின் நிதித் துறை முதன்மைச் செயலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளது.
வருவாய்த் துறை இணக்க முறை தணிக்கை என்பது வருவாய் தொடா்பான செயல்முறைகள், கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் அந்தத் துறையுடன் இணங்குகின்றனவா என்பதைச் சரிபாா்க்கும் அறிக்கையாகும்.
