பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை: 2 போ் கைது
திருமங்கலம் பகுதியில் பள்ளி மாணவா்களுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
திருமங்கலம் என்விஎன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (24). இவரது நண்பா் பாரி அரசன் (25). இவா்கள் இருவரும், 7 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களை ஏமாற்றி, மது அருந்தச் செய்து, அவா்கள் மயங்கியதும் இளைஞா்கள் இருவரும் மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனா். இவ்வாறு பல நாள்கள் அந்த மாணவா்களுக்கு தொல்லை கொடுத்திருக்கின்றனா். மேலும் அதை விடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவா்கள், தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனா். அவா்கள், குழந்தைகள் நலக் குழுவிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில், திருமங்கலம் காவல் நிலையத்தில் சஞ்சய், பாரி அரசன் மீது குழந்தைகள் நலக் குழு சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.
வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸாா், சஞ்சய், பாரி அரசனை திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
