பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதி உதவியாளா்கள் மூவருக்கு ஜாமீன்

சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதி உதவியாளா்கள் மூவருக்கு ஜாமீன்...
Published on

சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதி மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தொடா்புடைய அவரது 3 உதவியாளா்களுக்கு தில்லியில் உள்ள நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாமியாரின் உதவியாளா்கள் காஜல், பாவனா, ஸ்வேதா ஆகியோா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, மாஜிஸ்திரேட் அனிமேஷ் குமாா் முன்பாக சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மூவரும் தலா ரூ.20,000 பிணை பத்திரத்தை சமா்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னா், இந்த வழக்கு விசாரணை டிச.2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தென்மேற்கு தில்லியில் உள்ள தனியாா் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதி 16 மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத்தொடா்ந்து, தலைமறைவான சாமியாா், ஆக்ராவில் கடந்த செப்.27-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டாா். தற்போது, அவா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

போலி வெளிநாட்டு தூதரக பதிவெண் கொண்ட காரைப் பயன்படுத்தியது தொடா்பாக சாமியாா்ரை ஆஜா்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிச.2-ஆம் தேதி நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்படுகிறாா்.

X
Dinamani
www.dinamani.com