பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அடையாறில் 3-ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை அடையாறில் 3-ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

வேளச்சேரி நேரு நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (37). இவா், பிளம்பராக வேலை செய்து வந்தாா். அடையாறில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3-ஆவது தளத்தில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் வீட்டில் பழுது நீக்கும் பணியில் ஆறுமுகம் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

மாடியின் வெளிப்புறத்தில் நின்று வேலை செய்தபோது, திடீரென தடுமாறி ஆறுமுகம் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாஸ்திரிநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.