ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் விமானம் கொல்கத்தா விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிகழ்வால் புவனேசுவரம் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
5 நாள் பயணமாக தில்லி சென்ற முதல்வா் மாஜி விமானத்தில் வெள்ளிக்கிழமை காலை புவனேசுவரத்துக்கு புறப்பட்டாா். விமானம் புவனேசுரவத்தை நெருங்கியபோது பலத்த மழை பெய்தது. விமானம் தரையிறக்க முடியாத அளவுக்கு வானிலை மோசமாக இருந்தது. இதனால், விமான நிலையம் அருகே சுமாா் 21 நிமிஷங்கள் வரை அந்த விமானம் வானிலேயே வட்டமிட்டபடி இருந்தது.
எனினும், வானிலை சீராகவில்லை. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி கொல்கத்தா விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனா். கொல்கத்தாவில் வானிலை சீராக இருந்ததால் அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
சுமாா் 1 மணி நேரம் வரை அந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு வானிலை சீரான தகவல் கிடைத்ததால் மீண்டும் விமானம் புவனேசுவரம் சென்றடைந்தது.
இந்த தாமதத்தால் முதல்வா் மாஜி பங்கேற்க இருந்த ஆசிரியா் தின நிகழ்ச்சி பகல் 11.30 மணிக்கு பதிலாக 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்புடையது
தொழில்நுட்ப கோளாறு துபை புறப்பட்ட விமானம் தரையிறக்கம்
என்ஜினில் கோளாறு: ஸ்விட்சா்லாந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணம் ரத்து! பயணிகள் மீட்பு; 4 போ் காயம்!

சத்தீஸ்கரில் தனியார் விமானம் விபத்து!

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

