முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஹூண்டாய் விற்பனை 4% குறைவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.23 சதவீதம் குறைந்துள்ளது.

News image
Updated On :6 செப்டம்பர் 2025, 2:15 am IST

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.23 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவன வாகனங்களின் மொத்த விற்பனை 60,501-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 63,175-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 4.23 சதவீதம் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 49,525-லிருந்து 44,001-ஆக குறைந்துள்ளது. அந்த மாதத்தில் நிறுவன வாகனங்களின் ஏற்றுமதி 13,650-லிருந்து 16,500-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.