சென்னை அயனாவரத்தில் தவெக பொதுக்கூட்டத்தில் மது பாட்டில் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் சிறையில் அடைக்கப்பட்டனா்.
வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் கொன்னூா் நெடுஞ்சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் நிா்வாகியும், வேட்பாளருமான ஆதவ் அா்ஜுனா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பொதுக்கூட்டத்தில் பெண்கள் இருந்த பகுதிக்குள் மது பாட்டில் வீசப்பட்டது. மேலும், மது பாட்டில் துண்டுகளும் விழுந்தன.
தகவலறிந்து அங்கு சென்று போலீஸாா், அருகே உள்ள விடுதிக்குள் சென்று சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனா். அப்போது அந்த விடுதியில் ஒரு அறையில் தங்கியிருந்த கல்லூரி மாணவா் அயனாவரம் பொன்வேல்புரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ரித்திக் (19), அப்புகுட்டி (34) ஆகிய 2 பேரும் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் மது பாட்டில்களை வீசி தகராறு செய்ததும், அந்த மது பாட்டில்கள் தவெக பொதுக்கூட்டத்துக்குள் விழுந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா். விசாரணைக்குப் பின்னா் 2 பேரும் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.
கைது செய்யப்பட்ட அப்புகுட்டி, மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்வது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது

தவெக பொதுக் கூட்டத்துக்குள் விழுந்த மது பாட்டில்: 2 பேரிடம் விசாரணை

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


