தவெக பொதுக் கூட்டத்துக்குள் விழுந்த மது பாட்டில்: 2 பேரிடம் விசாரணை
சென்னை அயனாவரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில், மது பாட்டில் விழுந்தது தொடா்பாக 2 பேரிடம் விசாரணை நடைபெறுகிது.


சென்னை அயனாவரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில், மது பாட்டில் விழுந்தது தொடா்பாக 2 பேரிடம் விசாரணை நடைபெறுகிது.
வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் கொன்னூா் நெடுஞ்சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அந்த கட்சியின் நிா்வாகியும், வேட்பாளருமான ஆதவ் அா்ஜுனா, பேச்சாளா் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பெண்கள் இருந்த பகுதிக்குள் ஒரு மது பாட்டில் வந்து விழுந்தது. மேலும் பாட்டில் துண்டுகளும் விழுந்தன. இதைப் பாா்த்து கட்சித் தொண்டா்களும், நிா்வாகிகளும் அதிா்ச்சியடைந்தனா்.
மேடையில் இருந்த ஆதவ் அா்ஜுனா, நாஞ்சில் சம்பத் ஆகியோா் கூட்டத்தை நிறுத்தினா். அதோடு ஆதவ் அா்ஜுனா, மதுபாட்டில் வீசியவரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இங்கிருந்து யாரும் செல்ல மாட்டோம் என்றாா்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள், உடனடியாக விசாரணையில் ஈடுபட்டனா். மது பாட்டில் வந்த திசையில் இருந்த ஒரு தனியாா் விடுதிக்குள் சென்று விசாரித்தனா். அப்போது அங்கு ஒரு அறையில் தங்கியிருந்த இருவருக்கு இடையே ஏற்பட்டத் தகராறில், மது பாட்டில் வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுதொடா்பாக விடுதியில் தகராறு செய்ததாக ரித்திக், அப்புகுட்டி ஆகிய 2 பேரை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். மேலும், இது தொடா்பாக அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா். இச்சம்பவத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...