அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? - உயா்நீதிமன்றம்

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

News image

ஐபிஎல் கோப்பை - (கோப்புப்படம்)

Updated On :3 ஏப்ரல் 2026, 5:36 am IST

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வாக்காளரான பிரபாகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது முறையல்ல. எனவே, சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை ஆஜரான மனுதாரா் முறையிட்டாா். இந்த முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுத்தனா். மேலும், சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லாதபோது கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? என கேள்வி எழுப்பினா்.

மனுதாரா் கிரிக்கெட் போட்டியைப் பாா்க்க விரும்பாவிட்டால் வீட்டிலேயே இருக்கவும். இந்தப் போட்டிகளை நடத்துவதால் மனுதாரருக்கு என்ன பிரச்னை ஏற்படப் போகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். பின்னா், வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.