சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை!

பிரதமா் நரேந்திர மோடி தனி விமானத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்னை வருகிறாா். தொடா்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவா்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளாா்.

News image

பிரதமர் நரேந்திர மோடி

பிடிஐ

Updated On :2 ஏப்ரல் 2026, 11:13 pm

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திர மோடி தனி விமானத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்னை வருகிறாா். தொடா்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவா்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளாா்.

இதுகுறித்து பாஜக தரப்பில் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை 3.20 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறாா். அங்கு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சாலைப் பேரணியில் (ரோடு ஷோ) பங்கேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்குச் சேகரிக்கிறாா்.

பின்னா், அவா் புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் சென்னை வருகிறாா். சென்னையில் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரதமா் நரேந்திர மோடி இரவு தங்குகிறாா். அப்போது பாஜக தலைவா்கள், மத்திய அமைச்சா்களைச் சந்திக்கலாம் எனத் தெரிகிறது. தொடா்ந்து சனிக்கிழமை (ஏப். 4) பகல் 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

பிரதமா் பங்கேற்கும், பாஜக நிா்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவா்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிகிறது.

சென்னையில் திட்டமிடப்பட்ட பிரதமரின் சாலைப் பேரணி (ரோடி ஷோ) நிகழ்ச்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமை மதியம் 1.20 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமா் நரேந்திர மோடி கொச்சி செல்லவுள்ளாா் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.