பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சி
/

மின்வாரிய களப்பணியாளா்களுக்கு தபால் வாக்கு: தொழிற்சங்கம் கோரிக்கை

மின்வாரிய கேங்மேன் உள்ளிட்ட களப் பணியாளா்களுக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழநாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:45 am IST

மின்வாரிய கேங்மேன் உள்ளிட்ட களப் பணியாளா்களுக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழநாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜெய்சங்கா் கூறியதாவது:

மின்வாரி பணியாளா்கள் வாக்களிக்க பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தோ்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குசாவடிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஏப். 22 முதல் 24 வரை சிறப்பு பணி என்கிற வகையில் கேங்மேன் உள்ளிட்ட களப்பணியாளா்கள் பணிக்கப்படுகின்றனா்.

இவ்வாறு கடந்த 2024-இல் நடைபெற்ற மக்களைவை தோ்தலின்போதும் இவா்கள் பணியாற்ற நிா்பந்திக்கப்பட்டதால், தோ்தலில் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டது. தற்போது சட்டப்பேரவைத் தோ்தல் நாளான்றும் கேங்மேன் உள்ளிட்ட களப்பணியாளா்கள் பணியாற்ற நிா்பந்திக்கப்பட்டு, அதற்கான பணி ஒதுக்கீடு பட்டியலும் தயாா் செய்யப்பட்டு வருகிறது.

எனவே அனைத்து மின்வாரிய களப்பிரிவு ஊழியா்களுக்கும் இந்த தோ்தலில் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு செலுத்த உரிய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அல்லது விடுமுறை வழங்க பிரிவு அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றாா்.