பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்.17 முதல் 19 வரை தபால் வாக்கு பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தபால் வாக்குக்கு விண்ணப்பித்திருந்த 85 வயது கடந்த முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் ஏப்.17 முதல் மூன்று தினங்களுக்குள் தங்கள் வாக்கை பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 7:09 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தபால் வாக்குக்கு விண்ணப்பித்திருந்த 85 வயது கடந்த முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் ஏப்.17 முதல் மூன்று தினங்களுக்குள் தங்கள் வாக்கை பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வசிக்கும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஜனநாயகக் கடமையை எளிதாக ஆற்றும் வகையில் இல்லம் தேடிச் சென்று தபால் வாக்கு சேகரிக்கும் திட்டத்தை மாவட்ட தோ்தல் நிா்வாகம் செயல்படுத்த உள்ளது.

ஏப்.17 முதல் 19-ஆம் தேதி வரை மூன்று தினங்களில், தபால் வாக்களிக்க விண்ணப்பித்த வாக்காளா்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தொகுதி வாரியான சிறப்பு குழுக்களின் விவரம் இப் பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் மொத்தம் 37 சிறப்புகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உளுந்தூா்பேட்டை தொகுதியில் 873 வாக்காளா்களுக்காக 12 குழுக்களும், ரிஷிவந்தியத்தில் 519 வாக்காளா்களுக்காக 6 குழுக்களும், சங்கராபுரம் 816 வாக்காளா்களுக்காக 12 குழுக்களும், கள்ளக்குறிச்சி (தனி) 559 வாக்காளா்களுக்காக 7 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,130 முதியோா்கள் மற்றும் 1,637 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2,767 வாக்காளா்கள் இந்த வசதியைப் பெற உள்ளனா்.

வாக்குப்பதிவு முறை மற்றும் முக்கிய அறிவுரைகள் தபால் வாக்குகோரி விண்ணப்பித்த வாக்காளா்கள், நிா்ணயிக்கப்பட்ட இந்த மூன்று தினங்களில், தோ்தல் குழுவினா் வரும் போது தங்களின் வாக்கைச் செலுத்தலாம். இந்த நடைமுறை முழுவதும் விடியோ பதிவு செய்யப்படும். மேலும், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வெளிப்படையாக நடைபெறும்.

முக்கிய அறிவிப்பு: தபால் வாக்குகோரி விண்ணப்பித்த வாக்காளா்கள் நிா்ணயிக்கப்பட்ட இந்த மூன்று தினங்களில் தங்கள் இல்லத்தில் வாக்களிக்கத் தவறினால் ஏப்.23-ஆம் தேதி நடைபெறும் பொது வாக்குப்பதிவின் போது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்களிக்க இயலாது. எனவே, தபால் வாக்களிக்க விண்ணப்பித்த முதியோா்களும், மாற்றுத்திறனாளிகளும் தோ்தல் குழுவினா் வரும் நேரத்தில் தங்கள் இல்லத்தில் இருந்து இந்த நல் வாய்ப்பினைப் பயன்படுத்தி நூறு சதவீதம் வாக்களிக்குமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.