/

முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் பணி! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

News image

கோவையில் முதியவா் ஒருவரிடம் ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்கு பெற்ற தோ்தல் அலுவலா்கள்.

Updated On :12 ஏப்ரல் 2026, 8:25 pm

முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணியை, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, தபால் வாக்குகள் அளிக்க பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரடியாக செல்லும் அலுவலா்கள், அவா்களிடம் தபால் வாக்குகள் செலுத்தும் முறையை எடுத்துக் கூறி, வாக்குகளைப் பதிவு செய்து பத்திரமாக எடுத்துச் செல்கின்றனா்.

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் தபால் வாக்குகள் சேகரிக்க அமைக்கப்பட்டுள்ளன.