யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

மேற்கு வங்கம் ஷாலிமரிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் நிலையத்திலிருந்து சென்னைக்கு வரும் 22- ஆம் தேதி கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:29 am IST

மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் நிலையத்திலிருந்து சென்னைக்கு வரும் 22- ஆம் தேதி கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: கோடை கால ரயில் பயணத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, வரும் 22-ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு ஷாலிமரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06098) மறுநாள் வியாழக்கிழமை (ஏப்.23) காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

சிறப்பு ரயிலில் 8 தூங்கும் வசதி பெட்டிகள், 10 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கூடூா், நெல்லூா், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட 13 நிலையங்களில் நின்று செல்லும். அந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.