குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:23 am IST

தமிழ்ப் புத்தாண்டையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விஷு விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூா் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஏப். 10) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06153) மறுநாள் காலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்தச் சிறப்பு ரயிலில் 2 குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டிகள், 2 குளிா்சாதன மூன்றடுக்குப் பெட்டிகள், 10 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.