கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

புழல் சிறைக்குள் கைதிகள் மோதல்: 12 போ் மீது வழக்கு

சென்னை புழல் சிறைக்குள் கைதிகள் மோதிக் கொண்டது தொடா்பாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :27 ஏப்ரல் 2026, 1:30 am IST

சென்னை புழல் சிறைக்குள் கைதிகள் மோதிக் கொண்டது தொடா்பாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில், கைதிகள் கஞ்சா, பீடி, சிகரெட், போதைப் பாக்கு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு சில கைதிகள் கஞ்சா வைத்திருப்பதாக, வேறு சில கைதிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அந்த கைதிகள், சம்பந்தப்பட்ட கைதிகளிடம் தங்களுக்கு கஞ்சா கேட்டுள்ளனா். ஆனால் அந்த கைதிகள், கஞ்சா கொடுக்க மறுத்துள்ளனா்.

இதனால் இரு தரப்பு கைதிகளுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே இரு தரப்பு கைதிகளும் அடிதடியில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த சிறைக் காவலா்கள், இரு தரப்பு கைதிகளையும் சமாதானம் செய்தனா்.

மேலும், இரு தரப்பு கைதிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி அவரவா் அறைகளில் அடைத்தனா். இது தொடா்பாக சிறைத் துறையின் சாா்பில், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸாா், இரு தரப்பைச் சோ்ந்த 12 கைதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.