சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ஆம்ஸ்ட்ராங் வழக்கு எதிரி கைது

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய எதிரியான அஸ்வத்தாமன், பெங்களூருவில் இருந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:27 am IST

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய எதிரியான அஸ்வத்தாமன், பெங்களூருவில் இருந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டாா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் 5.7.2024-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் ரெளடி நாகேந்திரன், அவா் மகன் அஸ்வத்தாமன் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். இவா்களில் சிலா் அண்மையில் நீதிமன்ற பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்தனா்.

ஆனால் இவா்கள், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு சென்னை பெருநகர காவல் துறை பிணையில் வெளியே வந்தவா்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது.

இந்த நிலையில், கா்நாடக மாநிலம் பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் இருந்து அஸ்வத்தாமன், பாங்காங்க் செல்ல புதன்கிழமை முயன்றாா். இதைப் பாா்த்த குடியுரிமைத் துறை அதிகாரிகள், லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் அஸ்வத்தாமனை பிடித்து, சென்னை பெருநகர காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.

சென்னை போலீஸாா், அஸ்வத்தாமனை கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.