இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன் காா் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு பெண்ணுக்கு போலீஸாா் நோட்டீஸ் வழங்கினா்.
இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன், கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்துக்கு காரில் கடந்த 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சாப்பிட சென்றாா். அப்போது, அவருடைய காா் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இது தொடா்பாக திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், உணவகத்தில் காரை நிறுத்த இடம் இல்லாததால் அருகே சாலையோரத்தில் நிறுத்தியதும், அந்த காா் அங்கு வசிப்போருக்கு இடையூறாக இருந்ததால், பெண் ஒருவா் காா் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து இவ்வழக்குத் தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸாா், அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனா். அந்த பெண், ஓரிரு நாள்களில் விசாரணைக்கு ஆஜராவாா் என்று கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






