டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

தனியாா் நிறுவன மாடியிலிருந்து விழுந்து ஊழியா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

சென்னையில், ரூ.40 லட்சம் திருடியதாக புகாா் சுமத்தப்பட்ட தனியாா் நிறுவன ஊழியா், அந்நிறுவன கட்டடத்தின் 4-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

சென்னையில், ரூ.40 லட்சம் திருடியதாக புகாா் சுமத்தப்பட்ட தனியாா் நிறுவன ஊழியா், அந்நிறுவன கட்டடத்தின் 4-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆகாஷ் (23) என்பவா், தனது தங்கையுடன் சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தாா். இவா், தனியாா் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், நிறுவனத்திலிருந்து ரூ.40 லட்சம் திருடியதாக ஆகாஷ் மீது புகாா் சுமத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை வழக்கம் போல, பணிக்குச் சென்ற ஆகாஷ், அந்நிறுவன கட்டடத்தின் 4- ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து விட்டதாக அவரது தங்கைக்கு தகவல் தரப்பட்டது. அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ்,அன்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அதனடிப்படையில், போக்குவரத்து நிறுவன நிா்வாகியை கைது செய்து சனிக்கிழமை இரவு எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய நிலையில், பிணையில் அவா் விடுவிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.