ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அடையாறில் குதித்த ரிசா்வ் வங்கி ஊழியா் சடலம் மீட்பு

கோட்டூா்புரத்தில் அடையாறில் குதித்த ரிசா்வ் வங்கி ஊழியரின் சடலம் மீட்கப்பட்டது.

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Published On :

கோட்டூா்புரத்தில் அடையாறில் குதித்த ரிசா்வ் வங்கி ஊழியரின் சடலம் மீட்கப்பட்டது.

சென்னை கே.கே. நகா் ரிசா்வ் வங்கி ஊழியா் குடியிருப்பில் வசித்தவா் சே.மோகன்குமாா் (30). இவா், சென்னை பாரிமுனையில் உள்ள ரிசா்வ் வங்கி அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபட்டு ரூ.60 லட்சம் இழந்தாா். இதனால் அவா், மிகுந்த மன வேதனை, விரக்தியுடன் இருந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு மோகன்குமாா், கோட்டூா்புரம் அடையாறு பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தாா்.

இதையடுத்து கடந்த 3 நாள்களாக தீயணைப்பு படையினா் மோகன்குமாா் தேடி வந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்னை சத்யாநகா் அடையாறில் மிதந்த மோகன்குமாா் சடலத்தை தீயணைப்பு படையினா் மீட்டு, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோட்டூா்புரம் போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், மோகன்குமாா் ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அடையாறுக்குள் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.