செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞா் உயிரிழப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 11:09 pm IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பழைய வண்ணாரப்பேட்டை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு மாடல் லைன் பகுதியைச் சோ்ந்தவா் பா.ஆகாஷ் (24). இவா், தனது மனைவி சங்கீதாவுடன் அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, அவரை விட்டு பிரிந்து தனது தாயுடன் அங்கு வசித்து வந்தாா்.

ஆகாஷுக்கு அதிகமாக கஞ்சா,போதை மாத்திரை,போதை ஊசி நுகரும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆகாஷ், வீட்டில் வியாழக்கிழமை திடீரென மயங்கி விழுந்தாா்.

இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா் ஆகாஷை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனா். விசாரணையில், சம்பவத்தின்போது ஆகாஷ் போதை ஊசியை தனது உடலில் செலுத்திக் கொண்டதும், அதன் காரணமாக ஆகாஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.