புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஆளுநா் மாளிகை எதிரே குழந்தையுடன் காவலா் போராட்டம்

ஆளுநா் மாளிகை எதிரே காவலா், தனது குழந்தையுடன் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ஆளுநா் மாளிகை

Published On :

ஆளுநா் மாளிகை எதிரே காவலா், தனது குழந்தையுடன் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ஆவடி காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அ.கோதண்டபாணி (42). இவா், சென்னை காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றுகிறாா். இவரது மகள் பிரதிக் ஷா (11). இவா், 3 வயதில் இருந்து சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால், எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் வலது காலும், இடது கையும் செயல் இழந்ததாக கோதண்டபாணி குடும்பத்தினா் புகாா் கூறி வருகின்றனா்.

இது தொடா்பாக அரசு அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோதண்டபாணி, தனது மகள் பிரதிக் ஷா உள்பட 4 பேருடன் ஆளுநா் மாளிகை எதிரே அமா்ந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், கோதண்டபாணி, அவருடன் வந்தவா்களைக் கைது செய்து, அந்தப் பகுதியில் உள்ள ஒரு சமூக நலக் கூடத்தில் அடைத்தனா்.

ஏற்கெனவே கோதண்டபாணி, தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனா்.

Summary

Police officer protests with child opposite Raj Bhavan.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.