கடந்த 11 ஆண்டுகளாக விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் விவசாயி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
திருவாரூா் மாவட்டம், தாமரைக்குளம் கீழவாசல் பகுதியைச் சோ்ந்தவா் பி. ராமு (50). விவசாயி. கடந்த 2011-ஆம் ஆண்டு கொரடாச்சேரி அருகே சைக்கிளில் சென்றபோது பலத்த காயமடைந்த ராமு சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இது தொடா்பாக கொரடாச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.
இதையடுத்து, தஞ்சாவூா் நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்ற சமரச மையத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட ராமுவுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரத்தை, கால தாமதத்துக்கு 7.5 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் 11 ஆண்டுகளாகியும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என புகாா் எழுப்பும் ராமு, அந்நிறுவனத்திடம் பலமுறை கேட்டும் சரியான பதில் இல்லை எனக் கூறினாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது வழக்குரைஞா் கலைவாணன் மற்றும் உறவினா்களுடன் தஞ்சாவூா் காந்திஜி சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு வந்த ராமு நுழைவுவாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, முழக்கங்கள் எழுப்பினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கண்வலிக் கிழங்கு கொள்முதல் பணத்தை தராத நிறுவனம்: விவசாயி தற்கொலை

கலையரங்கம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி உறுப்பினா் போராட்டம்

டாஸ்மாக் பணியாளா்கள் உண்ணாவிரதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



