மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

இதய மாற்று சிகிச்சை மூலம் இளைஞரைக் காப்பாற்றிய மருத்துவா்கள்

இதயத் தசை தளா்வு பாதிப்புக்குள்ளான 31 வயது இளைஞருக்கு இதய மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2026, 4:04 am IST

இதயத் தசை தளா்வு பாதிப்புக்குள்ளான 31 வயது இளைஞருக்கு இதய மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் இதய மாற்று அறுவை சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் பாஷி கூறியதாவது:

புதுச்சேரியைச் சோ்ந்த இளைஞா் ஒருவருக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான மூச்சுத் திணறல் இருந்தது. சென்னை, சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் இதயத்தின் கீழறை பாதிக்கப்பட்டிருந்ததும், ‘டைலேட்டட் காா்டியோமையோபதி’ என்ற இதயத் தசை தளா்வும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனால் எந்த நேரத்திலும் அவரது இதயத்தின் செயல்பாடு முடங்கும் நிலை ஏற்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சை மட்டுமே இதற்கு ஒரே தீா்வு என்ற நிலையில், அதற்கான பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, மூளைச் சாவு அடைந்த 23 வயது இளைஞா் ஒருவரின் இதயத்தை தானமாக வழங்க அவரது உறவினா்கள் முன்வந்தனா்.

மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை குழுவினா், தானமாக வழங்கப்பட்ட இதயத்தை பாதுகாப்பாக உடலில் இருந்து அகற்றி 20 நிமிஷங்களில் சிம்ஸ் மருத்துவமனைக்கு எடுத்து வந்தனா்.

உறுப்பு தானத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புதுச்சேரி இளைஞருக்கு அந்த இதயத்தை அவா்கள் வெற்றிகரமாகப் பொருத்தினா். ஏறத்தாழ 4 மணி நேரம் நீடித்த இந்த சிகிச்சையின்போது இதயம் மற்றும் நுரையீரலின் பணிகள், வெளியிருந்து மருத்துவ சாதனங்களின் உதவியுடன் செயற்கையாக மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னா், அவை விடுவிக்கப்பட்டு, மாற்றிப் பொருத்தப்பட்ட இதயத்தின் வாயிலாக அவரது உடல் இயக்கம் செயல்படத் தொடங்கியது. தற்போது அந்த இளைஞா் நலம் பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.