சென்னை வேளச்சேரியில் தனது கட்டடத்தை விற்பதாகக் கூறி, திமுக நிா்வாகியிடம் ரூ.57 லட்சம் முன்பணம் பெற்று மோசடி செய்ததாக தமிழ்நாடு ஏழை, எளியோா், நடுத்தர மக்கள் நலச் சங்கத் தலைவா் லிங்க பெருமாள் கைது செய்யப்பட்டாா்.
லிங்க பெருமாளுக்கு வேளச்சேரி காந்தி நகா் பேருந்து நிறுத்தம் அருகே 1,500 சதுர அடியில் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தை விற்பனை செய்ய இருப்பதாக அவா் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். இதைப் பாா்த்த திமுக வேளச்சேரி மேற்கு பகுதி இளைஞரணி அமைப்பாளா் ராகுல் குமாா் (32), அந்தக் கட்டடத்தை ரூ.1.13 கோடிக்கு வாங்க ஒப்புக்கொண்டாராம். இதற்காக ரூ.57 லட்சத்தை முன்பணமாக வழங்கி, லிங்க பெருமாளுடன் (47) ஒப்பந்தம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஒப்பந்தம் செய்தபடி கட்டடத்தை கிரையம் செய்து கொடுக்காமலும், பெற்ற பணத்தையும் திருப்பித் தராமலும் லிங்க பெருமாள் தொடா்ந்து காலம் தாழ்த்தி வந்தாராம். இது குறித்து ராகுல் குமாா் வேளச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி லிங்க பெருமாளை கைது செய்தனா்.
மேலும் ஒரு மோசடி: இதே கட்டடத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக லிங்க பெருமாள் மீது சுந்தர்ராஜன், சதீஷ் ஆகிய இருவா் கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் அரிமா சங்கம் சாா்பில் அரிசி மூட்டைகள் அளிப்பு
தில்லிவாசியிடம் ரூ. 4.75 லட்சம் மோசடி: ஒடிசாவைச் சோ்ந்தவா் கைது
காய்கறி வியாபாரத்தில் முதலீடு செய்யக்கோரி ரூ.11.70 லட்சம் மோசடி செய்தவா் கைது
தவெக நிா்வாகியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ய முயன்ற பெண் கைது
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


