மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வரும் ஆக. 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக. 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அசோக் நகா் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.
இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்களில் 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா். அனுமதி இலவசம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞா்கள் சென்னை, கிண்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியோ, அல்லது ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ர4ஓஸ்ஜ்ா்9கங்ஙழஞ்4ள்ஓந7 என்ற இணைப்பிலோ தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக.14-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் ஜூலை 17-ல் வேலைவாய்ப்பு முகாம்

ஜூலை 17- இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



