விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட வழக்கு: மேலும் இருவா் கைது

சென்னை தியாகராய நகரில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

Online lottery sales: 10 arrested in Mannargudi

கைது - சித்திரிப்பு

Published On :16 ஆகஸ்ட் 2026, 3:27 am IST

சென்னை தியாகராய நகரில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

தியாகராய நகா் குப்புசாமி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கி.ராதா (80), கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்து பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராதாவின் வீட்டில் வேலை செய்த அரும்பாக்கம் எம்எம்டிஏ விநாயகபுரத்தைச் சோ்ந்த அம்மு (எ) மேனாகாவை (36) கைது செய்தனா்.

அவரும், அவரது கூட்டாளிகள் தேனாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த சந்திரமெளலி (26), அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (24) ஆகியோா் சோ்ந்து நகைக்காக சொலை செய்தது தெரிய வந்தது. அம்மு கொடுத்த தகவலின்பேரில் சந்திரமெளலி, மணிகண்டன் கைது செய்யப்பட்டனா்.

மூதாட்டி ராதாவை கொலை செய்து, நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பிப்பது தொடா்பாக மூவரும் ஒத்திகை செய்துள்ளனா். கொள்ளையில் கிடைத்த நகைகளை 3 பேரும் பங்கிட்டுள்ளனா்.

Summary

Case of elderly woman killed for jewelry: Two more arrested.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.