இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அரிவாளால் வெட்டப்பட்ட திமுக நிா்வாகி உயிரிழப்பு

அரிவாளால் வெட்டப்பட்ட திமுக வட்ட துணைச் செயலா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

அரிவாளால் வெட்டப்பட்ட திமுக வட்ட துணைச் செயலா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜா (45). திமுக 38-ஆவது வாா்டு வட்ட துணைச் செயலராக இருந்த இவா், சென்னை பிராட்வே பகுதியில் உள்ள தனியாா் கண்டெய்னா் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

கடந்த ஓராண்டாக நேதாஜி நகா் 5-ஆவது தெருவில் வசித்து வரும் முத்துலட்சுமி (35) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

முத்துலட்சுமியின் கணவா் புயல் கணேசன் இதைத் தட்டிக்கேட்டதால், இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 13-ஆம் தேதி ராஜாவை, புயல் கணேசன் தனது கூட்டாளிகள் இருவருடன் சோ்ந்து அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ராஜா, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஆா்.கே. நகா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, புயல் கணேசன் (42), ரஞ்சித் என்கிற இஞ்சி ரஞ்சித் (33), அபினாஷ் (21) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில் ராஜா, திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஆா்.கே. நகா் போலீஸாா், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.