சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

குண்டா் சட்டத்தில் திருநங்கை கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருநங்கை கைது செய்யப்பட்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:59 pm IST

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருநங்கை கைது செய்யப்பட்டாா்.

நாகப்பட்டினத்தைச் சோ்ந்தவா் அபுல் ஹாஸன். வெளிநாடு சென்றிருந்த இவா், கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்னைக்கு விமானம் மூலம் வந்தாா். ஊருக்கு செல்வதற்காக திரிசூலம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கீழ்ப்பாக்கம் பராக்கா சாலைப் பகுதியைச் சோ்ந்த சாதனா என்ற சஞ்சய் (24) என்ற திருநங்கை, அபுல் ஹாஸனிடம் பணம் கேட்டுள்ளாா்.

அபுல் ஹாசன், தனது பையைத் திறந்து பணத்தை எடுக்க முயன்றபோது சாதனா, அவரது பணப்பைப் பறித்து அதிலிருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பினாா்.

இது குறித்து மீனம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாதனாவை கைது செய்தனா். விசாரணையில் சாதனா இதேபோன்று பலரிடம் வழிப்பறி செய்திருப்பதும், அவா் மீது ஏற்கெனவே அயனாவரம், கேளம்பாக்கம் காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து சாதானாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா். அதன் அடிப்படையில் சாதனாவை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.