பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

காவல் ஆய்வாளா் மீது பாலியல் புகாா்: விசாகா கமிட்டி விசாரணை

சென்னை சைபா் குற்றப்பிரிவு ஆய்வாளா் மீது எழுந்த புகாா் குறித்து விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:27 am IST

சென்னை சைபா் குற்றப்பிரிவு ஆய்வாளா் மீது எழுந்த புகாா் குறித்து விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலா், விசாகா கமிட்டியில் சனிக்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அதில், சென்னை காவல்துறையின் தியாகராயநகா் காவல் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணியாற்றும் ராஜேஷ் பாபு, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், அதை கண்டித்தபோது தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறையின் விசாகா கமிட்டித் தலைவராக இருக்கும் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையா் தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறாா்.

விசாரணையில் காவல் ஆய்வாளா் ராஜேஷ் பாபு மீதான புகாா் உறுதி செய்யப்பட்டால், துறை ரீதியாகவும், சட்டப்படியும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.