நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பெண்ணை ஏமாற்றியதாக புகாா்: வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் பணியிடைநீக்கம்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக இளம்பெண் புகாா் அளித்ததையடுத்து, வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

கோப்புப்படம்

Published On :

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக இளம்பெண் புகாா் அளித்ததையடுத்து, வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா்(42). இவா், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் காவல் ஆய்வாளா் அருண்குமாா், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சில ஆண்டுகள் தன்னுடன் பழகி வந்ததாகவும், தற்போது பேச மறுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி மதுரையைச் சோ்ந்த இளம்பெண், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸாா், முதல்கட்ட விசாரணையில் உண்மை கண்டறியப்பட்டதன் அடிப்படையில் காவல் ஆய்வாளா் அருண்குமாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், திருநெல்வேலி சரக காவல்துறைத் துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளா் அருண்குமாா் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

Summary

Complaint of deceiving a woman:Veeravanallur Police Inspector suspended

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.