மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :18 ஆகஸ்ட் 2026, 3:45 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வீரவநல்லூா் அருகே உள்ள வடக்கு காருக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் மகன் பாலமுருகன் (25). தொழிலாளி. இவா் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது பெற்றோா் வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியும் செல்லாததால் கண்டித்துள்ளனா்.

இதனால், மனமுடைந்த பாலமுருகன் திங்கள்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வீரவநல்லூா் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.