பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சென்னையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில், கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் முஹம்மது புகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

சென்னையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில், கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் முஹம்மது புகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் வியாபாரி அகில்குமாா். இவரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்து கைது செய்து விடுவதாக பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த முஹம்மது புகாரி மிரட்டி, ரூ.40 லட்சம் வரை பறித்துள்ளாா்.

புகாரின் மிரட்டலை தாங்க இயலாத அகில்குமாா், அண்மையில் சென்னை காவல் ஆணையா் அமல்ராஜை சந்தித்து புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் யானைக்கவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புகாரியையும், அவரது கூட்டாளி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பைச் சோ்ந்த சீனிவாசனையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட புகாரியை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையா் அமல்ராஜ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.