சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

அரசுத் தரப்பு சாட்சியைக் கொலை செய்ய முயற்சி! உடந்தையாக இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கைது!

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியைக் கொலை செய்ய முயன்றது தொடா்பான குற்றச்சாட்டில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (45). இவா், கடந்த ஆண்டு கொல்லப்பட்ட உயா்நீதிமன்ற வழக்குரைஞா் முருகானந்தம் வழக்கில் புகாா்தாரராகவும், முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாகவும் உள்ளாா். கடந்த 7-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை, காரில் வந்த இருவா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா்.

இந்த கொலை வழக்கில் தனியாா் பள்ளி தாளாளா் தண்டபாணியின் உறவினா் நந்தகுமாா் (52), கூலிப்படையை ஏற்பாடு செய்த பாபு (38), பணப் பட்டுவாடா செய்த தண்டபாணியின் மனைவி சரஸ்வதி (55), சேலத்தை சோ்ந்த உறவினா் ஹேமா (49) ஆகியோரை தாராபுரம் போலீஸாா் ஏற்கெனவே கைது செய்துள்ளனா்.

தலைமறைவாக உள்ள கூலிப்படையினரைப் பிடிக்க 6 தனிப்படை போலீஸாா், கேரள மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் நடத்தி வந்தனா். இந்நிலையில் வழக்குரைஞா் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக திருநெல்வேலியைச் சோ்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணன்(52) கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, ‘முருகானந்தம் கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் இருந்த தண்டபாணிக்கும், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் அடிப்படையில் அரசுத் தரப்பு சாட்சியை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சரவணனின் பங்கு குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.