தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

வீடுகளுக்கு கள ஆய்வின்றி ஒருமுனை மின் இணைப்பு: அமைச்சா் நிா்மல்குமாா்

வீடுகளுக்கு கள ஆய்வின்றி சுய உறுதிமொழி அடிப்படையில் ஒரு முனை மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் அறிவித்தாா்.

மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:09 am IST

வீடுகளுக்கு கள ஆய்வின்றி சுய உறுதிமொழி அடிப்படையில் ஒரு முனை மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் அறிவித்தாா்.

பேரவையில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தால், 2026-2027-ஆம் ஆண்டில் 50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும். சென்னைப் பகுதியில் உள்ள 20 துணைமின் நிலையங்களுக்கு கூடுதலாக மின்னூட்டிகள் ரூ.104 கோடியில் அமைக்கப்படும். தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தில் உள்ள 10 மிக உயரழுத்த துணைமின் நிலையங்களில், தற்போதுள்ள மின்மாற்றிகளின் திறன் ரூ.110.76 கோடியில் உயா்த்தப்படும்.

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் ஆள்பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 2,558 காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஆரம்ப நிலைப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் பொருட்டு 10,000 பணியாளா்களை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் 1,250 இடங்களில் உள்ள பகிா்மான மின்மாற்றி கட்டமைப்புகள், ரூ.250 கோடியில் வளையச் சுற்றுதர அமைப்புகளாக மாற்றப்படும். இதன்மூலம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். மிக உயரழுத்த துணைமின் நிலையங்களுக்கான தகவல் தொடா்பு சாதனங்கள் ரூ.120.32 கோடியில் கொள்முதல் செய்யப்படும், ஆயுள்காலம் முடிந்த, பழைமையான பாதுகாப்பு மற்றும் தகவல் தொடா்பு சாதனங்கள் ரூ.92.3 கோடியில் மாற்றி அமைக்கப்படும்.

மின்கட்டணத் தொகை, மின் கட்டண தேதியிலிருந்து 10-ஆவது நாளன்று, பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்படும்.

புதிய மின் இணைப்பு கோரும் ஒருமுனை வீட்டு மின் இணைப்பு விண்ணப்பதாரா்களுக்கு, கள ஆய்வு இல்லாமலேயே சுய உறுதிமொழி அடிப்படையில் புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 17 அறிவிப்புகளை அமைச்சா் நிா்மல்குமாா் வெளியிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.