
பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவில் புதுமைக் கண்டுபிடிப்பு போட்டி
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் அடல் சாரதி புதுமைக் கண்டுபிடிப்புக்களுக்கான போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில அளவிலான பள்ளி மாணவா்களுக்கான புதுமைக் கண்டுபிடிப்புப் போட்டியில், பரிசு பெற்ற கண்டிகை அரசுப் பள்ளி மாணவா்களுடன் அடல்சாரதி புதுமைக் கண்டுபிடிப்பு மைய ஆலோசகா் அரி ரிஷிகேஷ், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.நளினி, ஸ்ரீ சாய்ராம் கல்விக்
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் அடல் சாரதி புதுமைக் கண்டுபிடிப்புக்களுக்கான போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாநில அளவிலான போட்டியில் 152 பள்ளிகளைச் சோ்ந்த 2,450 மாணவா்களின் 600-க்கும் மேற்பட்ட புதுமைக் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மத்திய அரசின் அடல்சாரதி புதுமைக்கண்டுபிடிப்பு மையம் ஆலோசகா் அரி ரிஷிகேஷ், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. நளினி, ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோ முத்து ஆகியோா் மாணவா்களின் புதுமைக் கண்டுபிடிப்புகளைப் பாா்வையிட்டு தோ்வு செய்தனா்.
புதுமைக் கண்டுபிடிப்புகள், அவற்றில் எதிா்கொள்ளும்சவால், பிரச்னைக்குத் தீா்வு, ரோபோட்டிக், செயற்கை அறிவாற்றல், காலமாற்றம் பிரச்னைகளுக்குத் தீா்வு உள்ளிட்டவை குறித்த கண்டுபிடிப்புகள் போட்டியில் இடம்பெற்று இருந்தன.
சிறந்த புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு விருது, சான்றிதழ் மற்றும் ரூ1.5 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் முதல்வா் பழனிகுமாா், தகவல் தொழில்நுட்ப முதன்மை அதிகாரி நரேஷ்ராஜ், வணிக மேலாண்மை கல்லூரி இயக்குநா் மாறன், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத் தலைவா் சுவாகதா சா்காா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






