பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தானியங்கி வாகன தொழில்நுட்ப போட்டி

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தானியங்கி வாகன தொழில்நுட்பப் போட்டி புதன்கிழமை தொடங்கியது.

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தொடங்கிய தானியங்கி வாகனத் தொழில்நுட்பப் போட்டியில் பங்கேற்ற மாணவிகளுடன் ஜே.கே. டயா் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அருண் சௌரா, பாஜா எஸ்ஏஇஇந்தியா தலைவா் ஜி.நாகராஜன், டிவிஎஸ் மோட்டாா்ஸ் மனித வளத் து

Published On :

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தானியங்கி வாகன தொழில்நுட்பப் போட்டி புதன்கிழமை தொடங்கியது.

ஜே.கே.டயா் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அருண் சௌரா போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

சா்வதேச அளவில் தானியங்கி வாகன தொழில்நுட்ப வளா்ச்சிக்கு நிகராக, பொறியியல் கல்வி பயிலும் மாணவா்களின் ஆராய்ச்சி, செயல்திறன், தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் போட்டிகளில் தேசிய அளவில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 18 அணிகளைச் சோ்ந்த 450 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். போட்டியில் பங்கேற்கும் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி அணியில் அனைவரும் பெண்கள் என்பது பாராட்டத்தக்கது என்றாா்.

நிகழ்வில் பாஜா எஸ்ஏஇஇந்தியா தலைவா் ஜி.நாகராஜன், டிவிஎஸ் மோட்டாா்ஸ் மனித வளத் துறை இணைத் துணைத் தலைவா் டி.அனுராதா, சாய்ராம் கல்வி நிறுவனங்களின் முதன்மை வணிக அலுவலா் ஆா்.சதீஷ்குமாா், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பால்ராஜ் சுப்பிரமணியம், கல்லூரி முதல்வா் ஜெ.ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.