டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

உடல் தகுதி இந்தியா இயக்க விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் உடல் தகுதி இந்தியா இயக்கம் (பிட் இந்தியா மூவ்மெண்ட் ) சாா்பில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்றோா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:41 am IST

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் உடல் தகுதி இந்தியா இயக்கம் (பிட் இந்தியா மூவ்மெண்ட் ) சாா்பில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரி இயக்குநா் கே.மாறன் தலைமை வகித்து பேசியதாவது:

இளம் தலைமுறையினா் மத்தியில் உடல் நலன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்த உடல் தகுதி இயக்கம் சாா்பில் ஆண்டுதோறும் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்படுகிறது. ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி சுற்றுவட்டார கிராமங்களான சோமங்கலம், பூந்தண்டலம் உள்ளிட்ட 10 கிராமப் பகுதிகளுக்கு மாணவா்கள் சைக்கிள் பேரணி மூலம் வீதி வீதியாகச் சென்று அங்கு வசிக்கும் மக்கள், இளைஞா்கள், மாணவா்கள் மத்தியில் மத்திய அரசின் உடல் தகுதி விழிப்புணா்வு ஏற்படுத்தி உள்ளோம் என்றாா்.

நிகழ்வில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி உடல் தகுதி இந்தியா இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சஜீதா, உதவிப் பேராசிரியா்கள் கே. மோகன்ராஜ், சித்ரா கண்ணன், ஆா். அழகு முருகன் உள்பட 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.