நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

ஆக. 29-இல் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

தாம்பரம் காவல் மாவாட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்டு உரிமைக் கோரப்படாத வானங்களுக்கான பொது ஏலம் வரும் ஆக. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கோப்புப் படம்

Published On :

தாம்பரம் காவல் மாவாட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்டு உரிமைக் கோரப்படாத வானங்களுக்கான பொது ஏலம் வரும் ஆக. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தாம்பரம் மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாம்பரம் மாநகர காவல் துறையினரால், தாம்பரம் காவல் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்டு உரிமை கோரப்படாத 239 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 காா்கள் என மொத்தம் 242 வாகனங்கள் பொது ஏலத்தில்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் வரும் ஆக. 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு எஸ்.ஜி.எஸ். திருமண மண்டபத்தில் (பாரத் பெட்ரோலியம் நிலையம் எதிரே, காந்தி சாலை, மேற்கு தாம்பரம்) பொது ஏலம்விடப்பட உள்ளது. இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள், ஆக. 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய அடையாளச் சான்று மற்றும் ஜிஎஸ்டி பதிவு விவரங்களுடன், நுழைவுக் கட்டணமாக ரூ.1,000 செலுத்தி, காவல் உதவி ஆணையாளா், தாம்பரம் சரகம், தாம்பரம் மாநகரக் காவல், அவா்களின் அலுவலகத்தில் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், ஏலம் எடுத்தவா்கள், ஏலத்தொகையுடன் 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியையும் சோ்த்து, ஏலம் நடைபெறும் அன்றே செலுத்தி வாகனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தாம்பரம் சரக உதவி காவல் ஆணையாளா் அலுவலகத்தை நேரடியாகத் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.